டெல்லியில் அதிக ஆபத்தான உடல்நலக்குறைவுகளை கொண்ட அனைவருக்கும் கொரோனா தொற்றை கண்டறியும், ஆண்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
அங்கு நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இன்ப்ளூயன்சா நோயின் அறிகுறி, சாரி எனப்படும் அதிக மூச்சுத் திணறல், எச்ஐவி நோயாளிகள், கீமோதெரபி போன்ற, அதிக ஆபத்தான உடல்நலக் குறைவுகளுடன் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனைவருக்கும், விரைவாக சோதனை முடிவுகள் கிடைக்கக் கூடிய ஆண்டிஜென் பரிசோதனை கட்டாயம் என டெல்லி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.