கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ஓராண்டுக்கு கட்டாயக்கி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் எச்சில் துப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது.சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமணங்களில் 50 பேருக்கும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மாநிலத்திற்குள் பயணிக்க இ பாஸ் தேவையில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அரசின் ஜாக்ரதா இ சேவையில் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டல்களை கேரள அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 6 மணி முதல் கடுமையான முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் பொங்கும் எரிமலையின் மீது அமர்ந்திருப்பது போன்ற ஆபத்தில் இருப்பதாக கேரள அமைச்சர் கே.சுரேந்திரன் அறிவித்ததையடுத்து இன்று முதல் கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கடைகள் யாவும் அடைக்கப்பட்டுள்ளன.
பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மருந்துக் கடைகள், மளிகை, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் திருவனந்தபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.