மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை அடுத்த ஒரு வருடத்திற்கு கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பணியிடங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் 6 அடி சமூக இடைவெளி கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. திருமணங்களில் 50 பேருக்கும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதிகாரிகளின் முன் அனுமதி இன்றி சமூக கூட்டங்கள், பார்ட்டிகள், ஊர்வலங்கள், போராட்டங்கள் போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது.
அனுமதி கிடைத்தாலும் 10 பேருக்கு மிகாமல் பங்கெடுக்க மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை என்றாலும். அப்படி செல்பவர்கள் அரசின் -ஜாக்கிரதா- என்ற தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.