கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக, டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 70 பொருள்களை உற்பத்தி செய்துள்ளதாக அதன் தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
டெல்லி கண்டோன்மென்டில், 250 ஐசியூ படுக்கைகளுடன் டிஆர்டிஓ அமைத்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கொரோனா மருத்துவமனையில் வைத்து செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.
இந்த மருத்துவமனையில் வாரத்தின் ஏழு நாட்களும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என அவர் கூறினார். ஒவ்வொரு மாதமும் 25000 என்ற எண்ணிக்கையில் வென்டிலேட்டர்களை தயாரிக்க டிஆர்டிஓ தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், தேவைப்பட்டால், வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கும் தயார் என தெரிவித்தார்.