கொரோனா பாதிப்புக்குப் பின்னர் ரயில்கள் முழு அளவில் இயக்கப்படும் போது பல வாராந்திர ரயில்களை நிரந்தரமாக நீக்கவும் ஏராளமான ரயில்கள் நிற்குமிடங்களைக் குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு வெளியாகும் ரயில்களின் பயண நேர அட்டவணை முன் எப்போதும் இல்லாத வகையில் குறைந்த ரயில்களின் பட்டியலுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முந்தைய ரயில் நேரங்கள், பயண நேரம், நிற்குமிடங்கள் யாவும் மாற்றியமைக்கப்பட உள்ளன.
வாரம் ஒருமுறை மட்டுமே இயங்கும் பல மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி மறைந்து போகக்கூடும். பல்வேறு அரசியல் செல்வாக்குகளால் அதிகரிக்கப்பட்ட ரயில் நிறுத்தங்கள் இனி குறையவும் வாய்ப்புள்ளது.
நீண்ட தூர ரயில்கள் பலமணி நேரம் பயண நேரத்தைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 151 தனியார் ரயில்களும் இந்த புதிய அட்டவணையைப் பின்பற்ற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.