மரியாதை, அமைதி, அகிம்சை ஆகியவற்றைப் புத்த மதம் போதிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆசாட பூர்ணிமாவையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி வீடியோவில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், குரு பூர்ணிமா நாள், அறிவுக் கண் திறந்த ஆசிரியர்களை நினைவுகூரும் நாளாகும் எனத் தெரிவித்துள்ளார். புத்த மதத்தின் போதனைகள் மக்களுக்கும், ஏழைகளுக்கும், பெண்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதைப் போதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்கும், அகிம்சைக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனப் போதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எண்ணம், செயல் ஆகியவற்றில் எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் புத்தரின் போதனையில் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் உட்பட உலகம் எதிர்கொண்டுள்ள சிக்கல்களுக்குப் புத்தரின் கொள்கைகளில் இருந்து தீர்வு கிடைக்கலாம் எனத் தெரிவித்தார்.