மும்பையில் முதல் கனமழை நேற்று பெய்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மூன்று மணி நேரம் செய்த கன மழையால் கொலாபா, நாரிமன் பாயின்ட், மெரீன் லைன்ஸ் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் பலவற்றில் சாலைகளில் வெள்ளம் புரண்டோடியது.
நேற்று ஒரே நாளில் 160 மில்லி மீட்டர் மழை பெய்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் சாய்ந்தன. மூன்று இடங்களில்வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
இதனிடையே மும்பையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.