புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் விதிமுறைகளை வணிகர்கள் மீறினால் மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அதிக அளவு சோதனைகள் செய்ய வேண்டியிருப்பதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுரிகளில் அதிக சோதனை மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை வார்டு அமைப்பதால் மற்ற சிகிச்சைகள் பாதிக்கப்படாது என்றும் கூறினார். ரயில் சேவைகளை தனியாரிடம் கொடுக்கும் முடிவால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு அதனை மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்தினார்.