செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

20 கோடி இந்திய கஸ்டமர்களை இழந்தது... டிக்டாக் தாய் நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி நஷ்டம்!

Jul 02, 2020 06:22:12 PM

டாக் எல்லையில்  நடந்த மோதலையடுத்து, டிக்டாக், ஷேர்சாட், உள்பட 59 சீனநாட்டு செயலிகளைத் தடை விதித்தது இந்திய அரசு. இதனால், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் ரூ.45,000 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 20 கோடி இந்தியர்கள் டிக்டாக்கை பயன்படுத்தி வந்தனர். இந்த கஸ்டமர்களையும் டிக் டாக் இழந்துள்ளது. 

இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், "கடந்த மாதத்தில் நடைபெற்ற இந்தியா - சீனா  எல்லைப் பிரச்னையால் சீன  செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் தான் பெரும் நஷ்டத்தை சந்திக்கும். சுமார் ரூ 45,000 கோடி மதிப்புக்கு இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும்” என்று சொல்லப்பட்டுள்ளது. 

டிக்டாக்  மட்டுமல்லாமல் தடை செய்யப்பட்ட செயலிகளின் தாய் நிறுவனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட விதத்தில் இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த சில வருடங்களில் பைட் டான்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ.7,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்தது. பைட் டான்ஸ் நிறுவனத்தின் சிறிய அளவிளான வீடியோக்களை பகிரும் செயலி டிக்டாக், இதே நிறுவனம் தான் சமூக வலைத்தளம் போல செயல்படும் ஹலோ செயலியை இந்திய சந்தையைக் குறி வைத்து அறிமுகம் செய்தது. அதே போல விகோ வீடியோ எடிட்டிங் செயலியும் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதுதான். 

மொபைல் செயலி பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவரின் தரவுப்படி மே மாதத்தில் மட்டும் உலகளவில் டிக்டாக் 12 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக்கின் பங்கு 20 சதவிகிதம் ஆகும்.  அமெரிக்காவை விட இது இரு மடங்கு அதிகம் ஆகும். 

 


Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement