இந்தியாவால் டிஜிட்டல் ரீதியிலான தாக்குதலையும் தொடுக்க முடியுமென மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கால்வன் பள்ளத்தாக்கு சம்பவ மோதல் எதிரொலியாக சீனாவிலிருந்து செயல்படும் டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.
இதுகுறித்து மேற்குவங்கத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பேசிய ரவிசங்கர் பிரசாத், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காகவும், இந்திய மக்களின் பாதுகாப்பு, தனிநபர் ரகசியத்தை பேணுவதற்காகவும் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.
நமது நாட்டின் எல்லை மீது பார்வை வைக்கும் பிற நாடுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், எப்படி நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது இந்தியாவுக்கு தெரியும் எனக் கூறிய அவர், இந்தியாவால் டிஜிட்டல் ரீதியிலான தாக்குதலை தொடுக்கவும் முடியும் எனவும் குறிப்பிட்டார்.