நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,148 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் மேலும் 434 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்து 641ஆகவும், பலி எண்ணிக்கை 17,834ஆகவும் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 26 ஆயிரத்து 947 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 3 லட்சத்து 59 ஆயிரத்து 860 பேர் குணமாகி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரத்து 298ஆகவும், பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 53ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 94 ஆயிரத்தை தாண்டிய நிலையில், டெல்லியில் 89 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 588 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதையும் சேர்த்து 90 லட்சத்து 56 ஆயிரத்து 173 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.