இந்தியாவில் ஜூன் மாத இறுதியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 10.99 விழுக்காடாக சரிந்துள்ளதாக சி.எம்.ஐ.இ ( CMIE )எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலான ஊரடங்கு காரணமாக மார்ச்சில் 8.75 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல், மே மாதங்களில் 23.5 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தது.
மே 3ம் தேதி நிறைவடைந்த வாரத்தில், உச்சபட்சமாக 27.1 விழுக்காடாக அதிகரித்திருந்தது. ஜூனில் ஊரடங்கு தளர்வுகள் அமலான பின், வேலைவாய்ப்பின்மை விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
நகர்புறங்களில் இந்த வேலையின்மை விகிதமானது 12.02 விழுக்காடாகவும் கிராமப்புறங்களில் 10.52 விழுக்காடாகவும் உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.