கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சீனாவிற்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக, பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், அண்டை நாடுகளுடன் நட்புறவை தொடரவே இந்தியா விரும்புவதாகவும், ஆனால் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் இந்தியாவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை, டோக்லாம் மற்றும் லடாக் பகுதியில் வழங்கப்பட்ட பதிலடி மூலம், சீனாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் தெளிவுபடுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனாவிற்கு பிறகான உலகின் முன்னேற்றம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சார்ந்து இருக்கும் என குறிப்பிட்ட ராம் மாதவ், அதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் எனவும், வலுவான பொருளாதார சக்தியாக வெளிப்பட இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.