தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்கப் போவதில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கால்வன் மோதலுக்குப் பின் இந்தியாவில் சீனப் பொருட்கள் புறக்கணிப்பு, சீனப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பதிலடி கொடுப்பது ஆகிய கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் சீனாவின் முதலீடு இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்தும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதேபோல் தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளிலும் கூட்டு நிறுவனங்கள் மூலம் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.