ராஜஸ்தான் மாநிலத்தில் பயிர்களை சேதப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்கப்பட்டு வருகின்றன. வடமாநிலங்களில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன.
ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், பயிர்களை தின்று தீர்ப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள், ட்ரோன்கள் மூலம் மருந்து தெளித்து அழிக்கப்பட்டன.
இதேபோல் நகாவூர் பகுதியிலும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் வந்த வெட்டுக்கிளிகளை பொதுமக்கள் பாத்திரங்களில் ஒலி எழுப்பி விரட்டினர். இது வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்க காலம் என்பதால், இன்னும் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.