கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வருவாய் இழப்பில் இருந்து மீள முடியாத நிலையில், பல விமான நிறுவனங்கள் இந்த மாதமும் சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.
பட்ஜெட் ஏர்லைன்சான இண்டிகோ, சில பைலட்டுகளின் சம்பளத்தில் 45 சதவிகதம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. நிறுவன ஊழியர்கள் பலர் சம்பளமில்லா விடுப்பு எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
40 சதவிகிதத்திற்கும் அதிகமான பணியாளர்களின் சம்பளத்தில் 5 முதல் 20 சதவிகிதம் கூடுதலாக குறைக்கப்படும் என விஸ்தாரா தெரிவித்துள்ளது. ஜூலை மாதமும் விமானிகளின் சம்பளம் 40 சதவிகிதம் குறைக்கப்படும் என ஏர்ஏசியா இந்தியா அறிவித்துள்ளது.90 சதவிகிதத்திற்கும் அதிகமான பணியாளர்கள் தொடர்ந்து சம்பளமில்லாத விடுப்பில் செல்லுமாறு கோஏர் கூறியுள்ளது.