சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளித்தால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின், உயிரை காக்க முடியும் என்பதன் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு நிதியாக முன்மொழிந்துள்ள மத்திய போக்குவரத்து அமைச்சகம், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் கீழ் இந்த திட்டத்தை செயல்படுத்த, தேசிய சுகாதார மையத்தை ஒருங்கிணைப்பு முகமையாக நியமித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களும், ஜூலை 10ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.