கர்நாடக மாநிலம் பல்லாரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை சவக்குழியில் தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும்நிலையில், நேற்று ஒரே நாளில் பல்லாரி, கோரணகல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 9 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்கள், உயிரிழந்த 9 பேரின் உடல்களை சவக்குழியில் தூக்கி வீசி ஜேசிபி வாகனத்தால் மண்ணை கொட்டி மூடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.