இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை காலையில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 16 ஆயிரத்து 893 பேர் பலியானதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கும், கேரளாவில் 131 பேருக்கும், கர்நாடகாவில் 947 பேருக்கும், ஆந்திராவில் 704 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியானது.
இதேபோல் உத்தர பிரதேசத்தில் 672 பேருக்கும், அசாமில் 41 பேருக்கும், ராஜஸ்தானில் 94 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 73 ஆயிரத்து 372ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் மேலும் 60 பேரும், கர்நாடகாவில் 20 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 977ஆக உயர்ந்துள்ளது.