எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊடுருவச் செய்வதாகவும், அந்த முயற்சிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருவதாகவும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத ஊடுருவலுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தியதாக தெரிவித்த அவர், அவை சிறப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பூஞ்சில் செய்தியாளர்களிடம் கூறினார்.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில், இந்த மாதம் மட்டும் 48 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். கடந்த 6 மாதங்களில் கொல்லப்பட்ட 128 தீவிரவாதிகளில் 70 பேர் ஹிஸ்புல் முஜாஹிதீனை சேர்ந்தவர்கள் எனவும், தலா 20 பேர் லஷ்கரே தொய்பா மற்றும் ஜெய்ஷே முகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.