அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன், தமது டிஜிட்டல் பிரச்சாரக்குழு தலைவராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த மேதா ராஜ் என்பவரை நியமித்துள்ளார்.
வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக பிரச்சாரம் முழுமையாக டிஜிட்டல் வடிவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற மேதா ராஜ் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமது நியமனம் குறித்து சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ள மேதா ராஜ், தேர்தலுக்கு 130 நாட்கள் உள்ள நிலையில், ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல் டிஜிட்டல் பிரச்சாரத்தை துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.