லடாக்கில் எல்லை பதற்றம் நிலவும் இந்த நெருக்கடியான நேரத்தில், இந்தியாவுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரான்ஸ், ராணுவ உதவி உள்ளிட்ட தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
கால்வானில் சீனாவின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணத்தை தழுவியதற்கு இரங்கல் தெரிவித்து, பிரான்ஸ் ராணுவ அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லே ((Florence Parly)), பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பிய கடிதத்தில் அவர் இந்த உறுதியை அளித்துள்ளார்.
தெற்காசியாவில் இந்தியாவை தங்களது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளி என்று குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் ராணுவ அமைச்சர், லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால், இந்தியாவுக்கு வந்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.