சீனாவை சேர்ந்த 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடை மிகுந்த கவலை அளிப்பதாகவும், அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இது குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் சீன நிறுவனங்களின் வர்த்தக உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாக கூறினார்.
இதனிடையே இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு வாடிக்கையாளர்களின் தனிநபர் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதாகவும், சீனா உள்ளிட்ட எந்த வெளிநாட்டு அரசுகளுடனும் அவை பங்கிடப்படுவதில்லை என்றும் டிக்டாக்-ன் இந்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை அகில இந்திய வர்த்தகர் சங்க கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு இது பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.