அரசு மின் சந்தை மூலம் எந்த சீனப் பொருட்களும் வாங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளார்.
சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சீனப்பொருட்களின் பயன்பாட்டினை குறைத்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், அதிகாரிகளுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில், இந்திய உணவுக்கழகம் மற்றும் மத்திய கிடங்குக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை அலகுகள் உள்பட் அனைத்துத் துறைகளிலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவது தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு பொருளும் அரசு மின்சந்தை மூலம் வாங்கப்படவில்லை என்பதை உறுதி செய்யுமாறும் கேடடுக் கொண்டுள்ளார்.