சீனாவுடன் எல்லையில் மோதல் நீடிக்கும் நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.
இந்தோ பசிபிக் கடல் பகுதியில் இந்தியாவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரான்ஸ் நாடு ஈடுபாடு கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கும் சமுத்திர சேது திட்டத்தை தீவிரமாக நிறைவேற்றி வருகின்றன.
இதே போல் ஜெர்மனியும் சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து கவலை தெரிவித்துள்ளது.
ஜி 20 நாடுகளின் அமைப்பில் இந்தியா தலைமை வகிக்க ஜெர்மனி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. வரும் 2022ம் ஆண்டு இந்தியா ஜி20 நாடுகளுக்குத் தலைமை வகிக்க உள்ளது. ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராகவும் இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது .