ஹைதராபாதில் அடுத்தடுத்து தனது மூன்று சகோதரிகளை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்திரயான்குட்டா பகுதியில் அகமது இஸ்மாயில் என்ற நபர் தனது சகோதரிகளுடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் இரண்டு பேரை குத்தினான் .
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .மற்றொரு சகோதரியும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து பாலாபுர் பகுதியில் வசிக்கும் இன்னொரு சகோதரியின் வீட்டுக்குச் சென்ற அகமது அங்கே அவரை குத்திக் கொலை செய்தார். கொலைகளுக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்