மும்பையில் பருவ மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பு பரவியுள்ளது .
இதனால் பொதுமுடக்கத்தை தளர்வுகளுடன் அம்மாநில அரசு ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில் மும்பையில் மழைக்காலத்தை சந்திப்பதற்கான தயார் நிலை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியிருப்பதாக அவருடைய அலுவலகக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
மும்பையின் வீதிகளில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் பெரும் திரளாகக் கூடுவதால் நோயைப் பரப்பும் ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
அவசியமின்றி வெளியே சுற்றி வாகன நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் டிவிட்டர் மூலம் தாக்கரே மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.