இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் முதன்மை வழக்கறிஞருமான அட்டர்னி ஜெனரல் பதவியில் கே.கே.வேணுகோபாலை மேலும் ஓராண்டு காலம் நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முகுல் ரோகத்கியைத் தொடர்ந்து, 2017ல் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.
அட்டர்னி ஜெனரலுக்கு துணைப் பதவியான சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு துஷார் மேத்தாவை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் நியமித்துள்ளது.
அதேபோன்று உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.