பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர் விமானங்களை சீனா நிறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்கார்டு என்ற இடம் இந்திய எல்லைப் பகுதியான லே வில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் அந்த இடத்தை விமானப்படைத் தளமாக சீனா பயன்படுத்துவதை இந்திய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.
இங்கு 40க்கும் மேற்பட்ட J 10 வகை போர்விமானங்களை சீனா நிறுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக காஷ்கர், ஹோடன், நாக்ரி குர்குன்சா என்ற 3 விமானப்படைத் தளங்களையும் சீனா பயன்படுத்தி வருவதையும் புலனாய்வுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
ஏற்கனவே லடாக் பகுதியில் சீனா தனது தளங்களை அமைத்து வருவதால் இந்தியா, சீனா இடையே கசப்புணர்வு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.