புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ஷராமிக் ரயில்களின் தேவை இனி இருக்காது என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் இருந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப மே 1 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதுவரை நாடு முழுவதும் 4, 596 ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே ஷராமிக் ரயில்களின் தேவை கணிசமாக குறைய தொடங்கியதாகவும், கடைசியாக தேவைப்பட்ட ரயிலும் நேற்று கர்நாடகவில் இருந்து இயக்கப்பட்டதாகவும் ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டு உள்ளது. அதேசமயம், மாநில அரசுகள் கோரிக்கை வைத்தால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.