ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் நிகழ்ந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி மசூது அகமது பட் உட்பட 3 பேரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் குல்சோகர் என்னுமிடத்தில் ராணுவம், மத்திய ரிசர்வ் காவல்படை, காஷ்மீர்க் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது நிகழ்ந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி மசூது அகமது பட் மற்றும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மசூதின் மறைவையடுத்துக் காஷ்மீரின் தோடா மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.