நாடு முழுவதும் 37 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக தேசிய நீதிமன்ற தரவு அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகளில் மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 28 லட்சம் வழக்குகளும், உயர் நீதிமன்றங்களுக்கு முன் 9 லட்சத்து 20 ஆயிரம் வழக்குகளும் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவற்றில், 6 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும், ஒரு லட்சத்து 31 ஆயிரம் வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக, தேசிய நீதிமன்ற தரவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.