ஊரடங்கு காரணமாக ஹரியானா மாநிலத்தில் 3 மாதங்களாக மூடப்பட்டு உள்ள வணிக வளாகங்களை திறப்பதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டு உள்ளது.
குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் மாவட்டங்களில் உள்ள வணிக வளாகங்கள் ஜூலை 1 முதல், திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இரவு 8 மணி வரை வணிக வளாகங்கள் இயங்கும் எனவும், திரையரங்குகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகள் மூடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனிமனித இடைவெளியை பின்பற்றி கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சிறுவர்கள் மற்றும் முதியோருக்கு வணிக வளாகங்களில் அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது