திருப்பதி ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு இன்று வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஜூலை மாத 300 ரூபாய்க்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட உள்ளது.
தினசரி 9 ஆயிரம் டிக்கெட்டுகள் ஸ்லாட் வாரியாக இணையதள முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூலை 1ம் தேதி முதல் சர்வ தரிசன நேரடி தரிசன ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.
தினசரி 3 ஆயிரம் டோக்கன்கள் சீனிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்பளக்சில் ஏற்படுத்தப்பட்ட கவுண்டர்களில் வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன்களை ஒருநாள் முன்பு பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட்டுகள் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.