பயனாளர்களின் நடமாட்டத்தை கண்காணித்து கொரோனா நோயாளிக்கு அருகில் செல்ல நேர்ந்தால் அவர்களை எச்சரிக்க கூடிய, புதிய வசதியை கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐபோன் நிறுவனங்கள் வடிவமைத்துள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு ஆரோக்ய சேது எனும் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியின் மூலம் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அருகாமையில் யாரேனும் இருந்தால், அதனை பயனாளர்கள் உடனடியாக அறியலாம்.
இந்நிலையில், இந்த வசதிய எந்தவித தனிப்பட்ட செயலியும் இன்றி போன்களிலேயே ஏற்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவர, கூகுள் மற்றும் ஐபோன் நிறுவனங்கள் மத்திய அரசை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மத்திய அரசு இத்திட்டம் தொடர்பாக, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.