ராஜஸ்தானில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி திருமணம் நடத்தப்பட்ட சம்பவத்தில் மணமகனின் தந்தைக்கு 6,26,600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பில்வாரா நகரில், 50 விருந்தினர்களுடன் மகனின் திருமணத்தை நடத்திக் கொள்ள கீசுலால் ரதி என்பவருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், திருமணத்தில் 250 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்களில் 15 பேருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், கொரொனாவால் மணமகனின் தாத்தாவும் உயிரிழந்தார்.மேலும் 58 பேர் நோய்தடுப்பு தனிமைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருமண குடும்பத்தாரின் அலட்சியம் காரணமாக, தனிமை வார்டு அமைத்தல்,சோதனை, உணவு என அரசுக்கு ஏற்பட்ட செலவுகள் கணக்கிடப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டு, அதை 3 நாட்களுக்குள் செலுத்துமாறு கெடு விதிக்கப்பட்டுள்ளது.