வெளிநாட்டு இந்தியர்களை மீட்கும் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் வரும் 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 170 ஏர் இந்தியா விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வந்தேபாரத் திட்டத்தின் நான்காம் கட்டமான இந்த காலகட்டத்தில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இலங்கை, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, தாய்லாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படும்.
ஊரடங்கால் கடந்த மார்ச் மாத கடைசி வாரத்தில் சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்பதற்காக, கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல், ஒவ்வொரு கட்டமாக ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.