280 ஆக இருந்த டெல்லியின் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 417 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று வேகமாகப் பரவும் டெல்லியில், சோதனைகளின் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 2.45 லட்சம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டு புதிய தொற்று பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 6 ஆம் தேதிக்குள் டெல்லியில் வீடு வீடாக சோதனைகளை நடத்தி முடிக்கவும் டெல்லி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.