டெல்லியில் வெட்டுக்கிளிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் இருந்து டெல்லி, குருகிராம், பரீதாபாத் ஆகிய பகுதிகளுக்கு வெட்டுக்கிளிக் கூட்டம் படையெடுத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், அரசு அதிகாரிகளுக்கு ஓர் அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
வெட்டுக்கிளிகளை விரட்ட டிரம்கள், பாத்திரங்களைக் கொட்டி முழக்கவும், அதிக ஒலியில் இசையை ஒலிபரப்பவும், அதிர் வேட்டுகளைக் கொளுத்தவும், வேப்பிலைகளை எரித்துப் புகைமூட்டம் எழுப்பவும் அறிவுறுத்தியுள்ளார்.
வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களைக் காக்கப் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கத் தீயணைப்புத் துறையினரைத் தயார் நிலையில் இருக்கக் கேட்டுக்கொண்டுள்ளார். வீடுகளில் கதவுகளையும் சன்னல்களையும் மூடிவைக்கும்படி தெரிவித்துள்ளார்.
மாலத்தியான், குளோர்பைரிபாஸ் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பவர்கள் உடல்காப்புக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.