செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

’கொரோனாவால் இறந்தவர் உடல் ஜே.சி.பி- யில் எடுத்து செல்லப்பட்ட அவலம்!- அதிர்ந்து போன ஆந்திரா

Jun 27, 2020 05:11:02 PM

ந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்துபோனவரின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி, ஜே.சி.பி இயந்திரத்தில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீகாகுளத்தில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார். அவரது உடலை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி, அடக்கம் செய்வதற்கு ஜே.சி.பி இயந்திரத்தில் கொண்டு சென்றிருக்கிறார்கள். உடல்களைக் கொண்டு சென்றவர்கள் மட்டும் பாதுகாப்பாக PPE கவசங்களை அணிந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த வீடியோவைப் பார்த்த, ஆந்திரப் பிரதேச முதல் அமைச்சர் அலுவலக அதிகாரிகள் உடனே ஸ்ரீகாகுள மாவட்ட ஆட்சித்தலைவரைத் தொடர்பு கொண்டு, "இது மனிதத்தன்மையற்ற செயல்" என்று கண்டித்தனர். , கொரோனா இறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.

இது குறித்து விசாரணை நடத்திய ஸ  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாகுளம் நகராட்சி ஆணையர் பி.நாகேந்திர குமார் மற்றும் சுகாதார அதிகாரி என்.ராஜீவை பணியிடை நீக்கம் செய்துள்ளார் 



இந்த சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி டுவிட்டரில், "கொரோனா நோயால் இறந்தவர் உடலை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ஜேசிபி இயந்திரத்தில் கொண்டு சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கொரோனா நோயால் இறந்தவர்களை மதிப்புடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டியது நமது கடமை" என்று கருத்து கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பு ஜூன் 24 - ம் தேதி கொரோனாவால் இறந்த பெண்மணியின் உடல் டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Advertisement
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி
பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் வசதி : பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்..
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement