இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹரியானா மாநிலம் குர்கானுக்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் இன்று நுழைந்தன.
அண்டை மாவட்டமான மகேந்திரகரில் வெட்டுக்கிளிகள் காணப்பட்டதால், அதுகுறித்து குர்கான் மக்களுக்கு அரசு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதில், வீட்டு ஜன்னல்களை அடைக்கும்படியும், பாலைவன வெட்டுக்கிளிகளை விரட்ட தகர டப்பாக்கள், பாத்திரங்கள்,மேள வாத்தியத்தை (tin boxes, utensils and dhol) தட்டி சத்தம் எழுப்பும்படியும் கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் குர்கானுக்குள் இன்று காலை ஏராளமான வெட்டுக்கிளிகள் நுழைந்தன. இதனால் குர்கானில் எங்கு பார்த்தாலும் வெட்டுக்கிளிகளாக காணப்பட்டன. இதையடுத்து அதை விரட்ட அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.