கொரோனா தொற்று உலகளாவிய பொருளாதார முறையை சிதறடித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அல்லயன்ஸ் ஃபார் மல்டிலேட்டரிசம் தொடர்பான இணையவழி மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்திய அவர் அரசியலை ஒதுக்கி வைத்து ஒற்றுமையுடன் இந்நோயை எதிர்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளிடம் வலியுறுத்தினார்.
பலதரப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை கோவிட்-19 எந்த வகையில் பாதிக்கிறது என்பதற்கான உண்மை நிலவரத்தை ஆராய்ந்து, எதிர்காலத்திலும் இதுபோன்ற தொற்றுகள் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
4 லட்சம் பேர்களின் உயிர்களைப் பறித்துள்ள கொரோனா, மக்களின் அன்றாட வாழ்க்கை, பணி, தொழில், பயணம், ஒருவருக்கொருவர் இடையிலான உறவு போன்ற பலவற்றை பேரழிவுக்கு ஆளாக்கியிருப்பதாக ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.