எல்லையில் அத்துமீறினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீனாவுக்கு இந்திய தூதர் மூலம் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி இந்தியா எல்லையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்பதை சீனாவுக்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீனப்படைகளை குறைக்க வேண்டும் என்றும் எல்லைப்பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்றும் அவர் சீனாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
எல்லைப் பகுதியில் புதிய கட்டுமானங்களை சீன ராணுவம் கைவிட வேண்டும் என்றும் மிஸ்ரி தெரிவித்துள்ளார். கல்லான் பள்ளத்தாக்கு முழுவதும் சீனாவுக்குரியது என்ற அந்நாட்டின் அறிவிப்பை இந்தியா ஏற்காது என்றும் அவர் சீன அரசிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சீனா மிகுந்த பொறுப்புடன் தனது படைகளைப் பின்வாங்கச் செய்தால் மட்டுமே எல்லையில் அமைதி பிறக்கும் என்று இந்தியா மிகக்கடுமையான முறையில் சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது.