உத்தரப்பிரதேச அரசு கொரோனாவுக்கு எதிராக கடுமையாகப் பணியாற்றியதால் 85ஆயிரம் உயிர்களைக் காக்க முடிந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தற்சார்பு வேலைவாய்ப்புத் திட்ட துவக்க விழாவில் பேசிய அவர், உலகின் பல நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்டது உத்தரப்பிரதேசம் எனத் தெரிவித்தார்.
மாநில அரசு கடுமையாகப் பணியாற்றியதால் கொரோனா பாதிப்பில் இருந்து 85 ஆயிரம் உயிர்களைக் காக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்தார். முழு உலகமும் ஒரே நேரத்தில் ஒரு சிக்கலை எதிர்கொள்ளும் என்று யாரும் நினைத்ததில்லை எனக் குறிப்பிட்டார்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கலால் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது எனக் குறிப்பிட்டார். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முகக்கவசம் அணிந்து 2 கஜம் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.