தலைநகர் டெல்லியில் ரயில் பெட்டிகளில் கொரோனா பாதித்தோரை தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து டெல்லியில்தான் கொரோனா பரவல் அதிகமுள்ளது. குறிப்பாக, மும்பை நகருடன் ஒப்பிடுகையில் டெல்லியிலேயே அதிக பாதிப்பு உள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளை தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்க அதிக இடவசதி டெல்லி அரசுக்கு தேவைப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, டெல்லி அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய ரயில்வே துறையால் ரயில் பெட்டிகளை சிறப்பு வார்டுகளாக மாற்றித் தந்துள்ளது.
அந்த பெட்டிகளில், கழிவறை வசதி, மின்சார வசதி மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சாகுர்பாஸ்தியில் ((Shakurbasti)) நிறுத்தப்பட்டுள்ள அப்பெட்டிகளை கண்காணிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் டெல்லி அரசு அளித்துள்ளது.