ஊரடங்கில் இருந்து விடுபடும் இரண்டாம் கால கட்டமான ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு சில சர்வதேச விமான சேவைகள் துவக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கான அனுமதி ஜூன் 30 வாக்கில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக டெல்லி-நியூ யார்க், மும்பை-நியூ யார்க் துவக்கப்படலாம் என அரசுடன் தொடர்புடைய சில வட்டாரங்கள் தெரிவித்தன. அதே போன்று வளைகுடா நாடுகளுக்கு சில தனியார் விமான நிறுவன சேவைகளும் துவக்கப்படும் என கூறப்படுகிறது.
கல்வி நிறுவனங்களையும், மெட்ரோ ரயில் சேவைகளையும் துவக்க மாநிலங்கள் தயக்கம் காட்டுவதால், அது குறித்த அறிவிப்பு எதையும் மத்திய அரசு வெளியிடாது என்றும் சொல்லப்படுகிறது.