கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணத்தால் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இந்தியர்கள் 250 பேர் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அட்டாரி (ATTARI, PUNJAB, INDIA ), வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினர்.
பாகிஸ்தானுக்கு பல்வேறு காரணங்களுக்காக சென்றிருந்த 748 பேர் ஊரடங்காலும், சர்வதேச விமான போக்குவரத்து தடையாலும் சிக்கிக் கொண்டனர். அவர்களில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 250 பேர் அட்டாரி வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பினர்.
அவர்களை அழைத்து செல்ல ஜம்மு காஷ்மீர் அரசு 10 பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தது. இதையடுத்து உரிய சோதனைக்கு பிறகு 10 பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர். இதேபோல் மேலும் 250 பேர் 26ம் தேதியும் (நாளையும்), எஞ்சிய 248 பேர் 27ம் தேதியும் அட்டாரி - வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பிவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.