பெங்களூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சமூக விலகலைக் கடைப்பிடிக்காவிட்டால் மற்றொரு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.
பெங்களூரில் மே 31ஆம் தேதி 350 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூன் 24ஆம் தேதி பாதிப்பு ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டோரில் 75 பேர் உயிரிழந்தனர். 418 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மற்றொரு ஊரடங்கு வேண்டாம் என விரும்பினால், சமூக விலகலையும், தூய்மையையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.