டெல்லியில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஜூலை 6 ஆம் தேதிக்குள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய கெஜ்ரிவால் அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்தினை கடந்துள்ளது.
தேசிய அளவில் தொற்று பாதித்த மாநிலங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்கும் முயற்சியாக மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த ஆய்வு ஆகியவற்றை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 6ம் தேதிக்குள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.