இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டை விட 2019ல் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 விழுக்காடு உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசநோய்க்கான வருடாந்திர அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், அதில் கடந்த ஆண்டு இந்தியாவில் சுமார் 24.04 லட்சம் காசநோயாளிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டை விட 14 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூலக்கூறு சோதனைகள் அதிகம் செய்யப்படுவதால் காச நோய் தாக்கியவர்கள் எளிதில் கண்டறியப்படுவதாகவும், இதனால் அந்த நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காடாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.